முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘அயலி’.. பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘அயலி’.. பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் முத்துகுமார்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் முத்துகுமார்

பெண் கல்வியை உணர்த்தும் ’அயலி’ படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று என உதயநிதி ஸாலின் பாராட்டியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிடி தளங்கள் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் அபாரமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அந்தந்த மொழிகளுக்கு தனி தனி கவனம் செலுத்தி படங்களையும் தொடர்களையும் பிரத்யேகமாக கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியான தொடர் ‘அயலி’. இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான அயலி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பல இடங்களில் பெற்று வருகிறது.

கடவுளின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் கிராமத்தைப் பற்றிய கதை. பெண்ணின் மாதவிடாய், பெண் கல்வி, மூடநம்பிக்கை போன்றவற்றை அழுத்தமாகப் பேசும் தொடராகவும் வெளிவந்திருக்கிறது அயலி.

குழந்தை திருமணம், சாதி வெறி , மூட நம்பிக்கைக்கு  எதிராக பேசி கல்வி முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் குழந்தைகளின் பெண் கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 8 எபிசோடுகள் கொண்ட  தொடராக வெளியானது.  வெளியான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில் அயலி தொடரை பார்த்த உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் முத்துக்குமாரை நேரில் அழைத்து தொடர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Udhayanidhi Stalin