Udhayanidhi Stalin: லிங்குசாமியின் கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ்!

உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ்

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனையாக மாற்றியுள்ளார் இயக்குநர் என்.லிங்குசாமி.

  • Share this:
    இயக்குநர் லிங்குசாமியின் கொரோனா மருத்துவமனையை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும், நடிகை கீர்த்தி சுரேஷும் திறந்து வைத்துள்ளனர்.

    தமிழகத்தில் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துள்ள COVID 19 2-வது அலையால், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 35000 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இறப்பு எண்ணிக்கை தினமும் 500-ஐ தொடுகிறது. அதிக தொற்றால் ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது. இந்த நிலைமையை எதிர்த்துப் போராட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து வருகின்றன.

    சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனையாக மாற்றியுள்ளார் இயக்குநர் என்.லிங்குசாமி. இதனை நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நேற்று இதனை திறந்து வைத்தனர்.



    அப்போது உதயநிதி குறித்து பேசிய லிங்குசாமி, இந்த தொற்றுநோய் காலத்தில் உயிருக்கு அஞ்சாமல் பொதுமக்களுக்கு உதவி வரும் உதய், தனது தாத்தா கருணாநிதியின் அறிவையும், தந்தை மு.க.ஸ்டாலினின் உள்ளத்தையும் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

    பின்னர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட லிங்குசாமி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தாமோ. அன்பரசன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: