Udhayanidhi Stalin: பிரபல இயக்குநர் படத்தில் இணைந்து நடிக்கும் உதயநிதி-அருள்நிதி?

அருள்நிதி - உதயநிதி

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான அருள்நிதி ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். அவற்றில் பெரும்பாலானவை ஹிட் படங்களாக மாறியுள்ளன.

  • Share this:
    நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினையும், அருள்நிதியையும் பிரபல இயக்குநர் ஒருவர் தனது படத்தில் ஒன்றாக நடிக்க வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு தனக்காக பிரச்சாரம் மேற்கொண்டவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அவர், தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். உதயநிதியின் தந்தை மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்று, கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முக்கியமான விஷயங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

    திரைப்பட முன்னணியில், 'கண்ணை நம்பாதே', 'ஏஞ்சல்', மற்றும் 'ஆர்டிகிள் 15 ரீமேக்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் உதய். அதோடு அதர்வா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையான வேடங்களில் நடிக்கக்கூடிய ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் பாலா உதயநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    தற்போது இதில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தனது ஸ்கிரிப்டை மாற்றி புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறாராம் பாலா. இதில் உதயநிதியும், அருள்நிதியும் இணைந்து நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான அருள்நிதி ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். அவற்றில் பெரும்பாலானவை ஹிட் படங்களாக மாறியுள்ளன.

    பாலா இயக்கத்தில் சகோதரர்கள் உதயநிதியும், அருள்நிதியும் இணைந்து நடிக்கும் விஷயம் கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது. இதனை பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: