உதயநிதி ஸ்டாலின் உடன் கரம் கோர்க்கும் பிக்பாஸ் ஆரி

ஆரி - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் உடன் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்டிகிள் 15’. அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தாமதமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த கையோடு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ5 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பிக்பாஸ் நடிப்பில் அலேகா, பகவான், எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் ஆகிய படங்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: