உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. படம் இம்மாதம் 20-ம்தேதி திரைக்கு வருகிறது.
இந்தியில் மெகா ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார். இந்தப் படம் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் உருவாகியுள்ளது. கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கனா, பேச்சலர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். அதாவது, தகுந்த நபர்களின் துணையுடன் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.
நெஞ்சுக்கு நீதியின் ஒரிஜினல் படமான ஆர்ட்டிகிள் 15-ல் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருப்பார். ஐபிஎஸ் அதிகாரியான அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 ஏழை சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்தை விசாரிப்பார்.
இதையும் படிங்க - கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிகாயிதம்... படம் எப்படி இருக்கு?
அப்போது சாதி பாகுபாடு, ஏற்றத் தாழ்வுகள் விசாரணைக்கு எந்த விதத்தில் தடைகளை ஏற்படுத்துகின்றன என்பதை திரைக்கதை விவரிக்கும். மதம், சாதி, பாலினம், பிறப்பிடம் என எதன் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை, இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 15 உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில் படத்தின் தலைப்பான ஆர்ட்டிகள் 15-ம், படத்தின் கதையும் ஒன்றிப் போனது.
இதையும் படிங்க - எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்
ஆரம்பம் முதல் முடிவுக் காட்சி வரை, ஆர்ட்டிகிள் 15 விறுவிறுப்பாக நகரும். அதே, விறுவிறுப்பை நெஞ்சுக்கு நீதி ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.