Home /News /entertainment /

சூர்யா படத்தால் தள்ளிப்போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

சூர்யா படத்தால் தள்ளிப்போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

எதற்கும் துணிந்தவன். நெஞ்சுக்கு நீதி

எதற்கும் துணிந்தவன். நெஞ்சுக்கு நீதி

இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தை தழுவி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. போனிகபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
உதயநிதி நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தால் தள்ளிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தை தழுவி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. போனிகபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கியுள்ளார். முதன்மை வேடத்தில் உதயநிதி நடிக்க அவருடன் தான்யா ரவிச்சந்திரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஏற்கனவே முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

நெஞ்சுக்கு நீதி இந்த மாத இறுதியில் வெளியாக வேண்டியது. போனிகபூர் தயாரித்த வலிமை பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானதால் நெஞ்சுக்கு நீதி படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தை வெளியிடலாம் என்றால் மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அதற்கு அடுத்த நாள் மார்ச் 11ஆம் தேதி பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தையும் தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

Also read... ஸ்ருதிஹாசனின் திருமணம் - காதலர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

இதன்காரணமாக நெஞ்சுக்கு நீதி படத்தின் வெளியீட்டை மார்ச் இறுதிக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி