Kaathu Vaakula Rendu Kadhal: விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
நயன்தாரா தயாரித்து நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பட விநியோகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி. சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த திரைப்படத்தை சென்ற தீபாவளிக்கு அவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படத்தையும் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டது. விரைவில் வெளிவர இருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையையும் உதயநிதியின் நிறுவனம் வாங்கியுள்ளது.
மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த நாள் மார்ச் 11 பிரபாஸ் நடித்திருக்கும் Pan - India திரைப்படமான ராதே ஷ்யாம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. அவர்கள்தான் இந்தப் படத்தையும் தமிழ்நாட்டில் விநியோகிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கி இருப்பதை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.