ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

கமல் ஹாசன் - உதயநிதி ஸ்டாலின்

கமல் ஹாசன் - உதயநிதி ஸ்டாலின்

தயவுசெஞ்சு தம்பியை தொடர்ந்து படங்கள் பண்ண சொல்லுங்க, அவர் வந்ததுக்கு அப்புறம் சினிமா நல்லாருக்குன்னு அப்பா கிட்டா சொன்னார் கமல் சார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இனி படம் விநியோகிக்க வேண்டாம் என முடிவு செய்த போது, நடிகர் கமல் ஹாசன் அட்வைஸ் செய்து அந்த முடிவை மாற்றியதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கலகத் தலைவன், மாமன்னன், கண்ணை நம்பாதே ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

  சினிமா, அரசியல் என பம்பரம் போல சுழன்றுக் கொண்டிருக்கும் உதயநிதியின் நடிப்பில் வரும் 18-ம் தேதி கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகிறது. இதையடுத்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் மூத்த சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனிடம் பேசிய உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் விநியோகத்தை நிறுத்தலாம் என முடிவு செய்த போது, கமல் அதை தடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

  கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் காஜல் அகர்வால்?

  இது குறித்து விளக்கமாக பேசிய அவர், “6, 7 மாதத்துக்கு முன்னாடி விநியோகம் பண்றதை நிறுத்திடலாம்ன்னு முடிவெடுத்தேன். நம்ம மிரட்டி தான் எல்லா படத்தையும் வாங்குறோம், எல்லா படத்தையும் நம்மளே பண்றோம்ன்னு கெட்ட பேர் வர்ற மாதிரி சில பேர் சொன்னாங்க. அப்பாவும் கூப்பிட்டு இது தேவையே இல்லையேன்னு சொன்னாரு. நானும் ஆமாப்பா இது பெரிய விஷயம் இல்லைன்னேன். கமல் சார் தான் இதை தடுத்தார். தயவுசெஞ்சு தம்பியை தொடர்ந்து படங்கள் பண்ண சொல்லுங்க, அவர் வந்ததுக்கு அப்புறம் சினிமா நல்லாருக்கு. வெளிப்படைத்தன்மையோட உண்மையான கணக்குகளை கொடுக்குறாங்க. இது படங்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நல்லதுன்னு அப்பா கிட்ட பேசினாரு. அப்புறம் அப்பா சரி ஓகே, நிறைய பண்ணாம கம்மி பண்ணிக்கோன்னு சொன்னாரு. இப்போ கொஞ்சம் குவாலிட்டியா நல்ல படங்களா பாத்து, அவசரப்படாம பண்ணிட்டு இருக்கோம்” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Kamal Haasan, Udhayanidhi Stalin