முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காபி வித் காதல் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்!

காபி வித் காதல் படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்!

காபி வித் காதல்

காபி வித் காதல்

காபி வித் காதல் திரைப்படம் சுந்தர்.சி யின் வழக்கமான ஃபார்முலாவில் இருந்து விலகாமல் சற்று வேறுபட்டு இருக்கும் என்று கூறுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சுந்தர்.சி இயக்கியுள்ள காபி வித் காதல் திரைப்படம் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகிறது இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார்.

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு ஜீவா - ஜெய் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தை வெளியிடும் வேளையில் சுந்தர்.சி இறங்கியுள்ளார். அதில் முதல் கட்டமாக காபி வித் காதலை ரெட் ஜெயின் நிறுவன மூலம் தமிழகத்தில் வெளியிட திட்டமிட்டார்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அது சுமூகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் அடிப்படையில் ஜெய் - ஜீவா நடித்துள்ள காபி வித் காதல் திரைப்படத்தை அக்டோபர் 7-ம் தேதி திரைக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Also read... நீங்கதான் எனக்கு மகனாக பொறக்கனும்னு கடவுள வேண்டிக்கிறேன் - குக் வித் கோமாளி புகழ் உருக்கம்!

காபி வித் காதல் திரைப்படம் சுந்தர்.சி யின் வழக்கமான ஃபார்முலாவில் இருந்து விலகாமல் சற்று வேறுபட்டு இருக்கும் என்று கூறுகின்றனர். இருந்தாலும் அந்த திரைப்படத்தை அனைவரும் ரசிப்பார்கள் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Jiiva, Actor Srikanth, Sundar C, Udhayanidhi Stalin, Yuvan Shankar raja