ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிருத்திகாவின் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின்...

கிருத்திகாவின் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின்...

உதயநிதி - கிருத்திகா

உதயநிதி - கிருத்திகா

கிருத்திகா சமீபத்தில் இயக்கிய பேப்பர் ராக்கெட் வலைதொடர் பெரும் வெற்றியைப் பெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கிருத்திகாவின் அடுத்தப் படத்தில் தான் இடம்பெற்றிருப்பதாக சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

  உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் திரைத்துறையில் பிஸியானவர்களாக வலம் வருகிறார்கள். தயாரிப்பு, நடிப்பு என உதய்யும், இயக்குநராக கிருத்திகாவும் ரசிகர்களின் நம்பிக்கைகளைப் பெற்றிருக்கிறார்கள். கிருத்திகா சமீபத்தில் இயக்கிய பேப்பர் ராக்கெட் வலைதொடர் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் பேப்பர் ராக்கெட் 2-க்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

  இதற்கிடையெ முன்னணி ஊடகத்துடனான சமீபத்திய நேர்காணலில், பேப்பர் ராக்கெட்-2-வை தான் தயாரிப்பதாக தெரிவித்த உதய், கிருத்திகா அடுத்ததாக இயக்கும் படத்திலும் தான் பணிபுரிவதாகக் குறிப்பிட்டார். உடனே அவர் ஹீரோவாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழ, இல்லை என பதிலளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

  வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இப்படத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருந்தனர். பின்னர் பிப்ரவரி 2017-ல், திருநங்கைகளின் வலிகளை சித்தரிக்கும் வகையில் "சதையை மீறி" என்ற இசை வீடியோவை இயக்கினார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதையடுத்து விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கினார் கிருத்திகா.

  விடுமுறை ஓவர்... வாரிசு செட்டுக்கு திரும்பிய விஜய்!

  சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட்டில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்தனர். இசை மற்றும் பின்னணி இசையை சைமன் கே கிங் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema, Udhayanidhi Stalin