இசைஞானி இளையராஜாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக பரிந்துரைத்துள்ளார்.
முறையாக வரி செலுத்திய மஞ்சு வாரியர்... பாராட்டி கெளரவித்த மத்திய அரசு!
புதிதாக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்று திகழ்கின்றனர். அதே நேரத்தில், இந்த பரிந்துரைகள் ஒருவித அரசியல் சிக்னல்களையும் தருகின்றன. ஆளும் பாஜக அரசு புதிய மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமித்துள்ள நால்வரும் தெற்கை சேர்ந்தவர்கள் என்பதால், தென் மாநிலங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது ஒருபுறமிருக்க, இசையால் பல கோடி மக்களின் மனங்களை கவர்ந்த இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கும் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனையாளர். தன் கடின உழைப்பால் கலையுலகில் உச்சம்தொட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா @ilaiyaraajaஅவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன். pic.twitter.com/Idi9Q2M4UR
— Udhay (@Udhaystalin) July 7, 2022
அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், “ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனையாளர். தன் கடின உழைப்பால் கலையுலகில் உச்சம் தொட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilaiyaraja, Ilayaraja