தஞ்சாவூர் கோயில் குறித்து ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு... அதன் பிறகு நடந்த மாற்றங்கள்...

ஜோதிகா

ஜோதிகா அவ்வாறு பேசியதற்கு பிறகு நடந்த மாற்றங்கள் குறித்து ‘உடன்பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை ஜோதிகா தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றி பேசியதும், அதன் பிறகு நடந்த விஷயங்களையும் பற்றி ‘உடன்பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

  நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து 4 மாதங்களுக்கு மாதம் ஒரு படம் வீதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்குநர் இரா.சரவணன் இயக்கியுள்ளார். குடும்பக் கதையை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் கடந்தாண்டு தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகா பேசிய கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறியது. இது ‘உடன்பிறப்பே’ பட ஷூட்டிங்கின் போது தான் பேசப்பட்டது என்றும், அதற்கான காரணம், ஜோதிகா அவ்வாறு பேசியதற்கு பிறகு நடந்த மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ‘உடன்பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.  அதில், “தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தப்போ, அங்கே கர்ப்பிணிகளும் பிரசவமான தாய்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தாங்க. முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது அவங்களை ரொம்ப அதிர வைச்சிருச்சு. அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும் தான் அவங்க பேசினாங்க. பேச்சோட நிற்கலை. அந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்தாங்க. அவங்க பேச்சு பரபரப்பான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போ டீனாக இருந்த மருதுதுரை சார் மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தினப்ப, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டச்சு. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: