ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தை தான் முதலில் பார்ப்பேன்... அபர்ணதி பளிச் பதில்!

துணிவு படத்தை தான் முதலில் பார்ப்பேன்... அபர்ணதி பளிச் பதில்!

அபர்ணதி

அபர்ணதி

தனக்கு அதிக ஸ்கீரின் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார் அபர்ணதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலில் தான் துணிவு படத்தை விரும்புவதாக நடிகை அபர்ணதி தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட அதில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அபர்ணதி. ஆர்யா மீது கொண்ட அன்பால் தனது பெயருக்கு பின்னால் இன்னும் 6ya என்ற பெயரை கூட சமூக வலைதளத்தில் இருந்து நீக்காமல் இருக்கிறார்.

அதில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் என்னவானார்கள் என்று தெரியாத நிலையில், தேன், ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அபர்ணதிக்கு கிடைத்தது. தற்போது உடன்பால் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் சார்லி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் வரும் வரும் 30-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதனை கார்த்திக் சீனிவாசன் இயக்கியுள்ளார்.

பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?

இந்நிலையில் உடன்பால் பட புரொமோஷனில் கலந்துக் கொண்ட அபர்ணதி, தனக்கு அதிக ஸ்கீரின் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். ஆர்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்றான்

பின்னர் பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு, துணிவு ஆகியப் படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, “நான் துணிவு படத்தைப் பார்ப்பேன், எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema