• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மேலும் இரு தமிழ் படங்கள்!

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மேலும் இரு தமிழ் படங்கள்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு ஓடிடியே ஆபத்பாந்தவனாக உள்ளது.

  • Share this:
    டிஸ்னி + ஹாட்ஸ்டார் தமிழ் படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிடுகிறது. நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி படங்களை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிட்டவர்கள் மேலும் இரு திரைப்படங்களை நேரடியாக வெளியிட உள்ளனர்.

    சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு ஓடிடியே ஆபத்பாந்தவனாக உள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்கில் படத்தை வெளியிட தலைகீழாக நிற்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்த திரையரங்குகளும் ஒன்றே இரண்டோ தினங்கள் மட்டும் படத்தை திரையிடும். வசூலான தொகையில் தயாரிப்பாளர் தனது பங்கை வாங்க காவிரியின் மொத்தத் தண்ணியையும் குடிக்க வேண்டிவரும்.

    ஓடிடியில் இந்தத் தொல்லை இல்லை. படமும், டீலும் அவர்களுக்கு ஒத்து வந்தால், முழுப்பணத்தை கையில் தந்து படத்தை வாங்கிக் கொள்வார்கள். விளம்பரம் உள்பட எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஓடிடி தளங்கள் படத்தை வாங்குவது அத்தனை சுலபமல்ல என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

    டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் முக்கியமான இரு படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. முதலில் லிப்ட். வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கும் லிப்ட் திரைப்படத்தில் கவின், அம்ரிதா நடித்துள்ளனர். சின்ன பட்ஜெட் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் லிப்டும் ஒன்று. இன்னொரு திரைப்படம், ஓ மணப் பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கும் இன்டஸ்ட்ரியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    disney plus hotstar, disney+ plus hotstar download, disney plus hotstar price, whats on disney plus hotstar, disney plus hotstar subscription, hotstar tamil, hotstar vip, disney+ hotstar download for pc, hotstar vip free, lift movie, oh mana penne, tamil movies, tamil movie list, tamil movie news, news in tamil, தமிழ் சினிமா, தமிழ் சினிமா செய்திகள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், லிஃப்ட், லிஃப்ட் திரைப்படம், ஓ மணப்பெண்ணே
    ஓ மணப்பெண்ணே


    disney plus hotstar, disney+ plus hotstar download, disney plus hotstar price, whats on disney plus hotstar, disney plus hotstar subscription, hotstar tamil, hotstar vip, disney+ hotstar download for pc, hotstar vip free, lift movie, oh mana penne, tamil movies, tamil movie list, tamil movie news, news in tamil, தமிழ் சினிமா, தமிழ் சினிமா செய்திகள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், லிஃப்ட், லிஃப்ட் திரைப்படம், ஓ மணப்பெண்ணே
    லிஃப்ட்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவ்விரு படங்ளும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாக உள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: