வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் நடிக்கும் இரு முன்னணி ஹீரோக்கள்!

வெங்கட் பிரபு

பிரபுதேவா தெலுங்கு, இந்தியில் பரிட்சயம் என்பதால், பான் - இந்தியா படமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநாடு படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் இரு முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெற்றி பெற்ற அனைத்துப் படங்களும் மல்டி ஸ்டாரர் எனப்படுகிற, பல நாயகர்கள் இணைந்து நடித்த படங்களே. சென்னை 28, கோவா, சரோஜா, மங்காத்தா நான்கிலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போல தனி ஹீரோவுக்காக கதை எழுதுகையில் வெங்கட்பிரபு சறுக்கி விடுகிறார். மாநாடு இதனை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி இன்னும் வெளியாகவில்லை. அதன் பிறகு மாநாடு படத்தை முடித்துவிட்டார். இதையடுத்து பிரபுதேவா, அரவிந்த்சாமியை வைத்து தனது புதிய படத்தை தொடங்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மின்சார கனவு மிகப்பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு இப்போதுதான் இருவரும் ஒன்றிணைகிறார்கள்

Also read... இந்திய மருத்துவத்துறையை அம்பலப்படுத்தும் பாண்டம் ஹாஸ்பிடல்!

பிரபுதேவா தெலுங்கு, இந்தியில் பரிட்சயம் என்பதால், பான் - இந்தியா படமாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். நடிகர் நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் அல்லது .ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published: