ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'' தமிழ் சினிமாவில் 2 டான்கள் உள்ளனர்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

'' தமிழ் சினிமாவில் 2 டான்கள் உள்ளனர்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவில் 2 டான்கள் உள்ளதாக நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த வாரம் படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டையொட்டி நேற்று விழா நடைபெற்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு டான் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க - எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது-

டாக்டரை விட டான் படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்தத் திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஓர் அழகான பள்ளிப் பகுதி இந்தப் படத்தில் உள்ளது.

ஒரே வாரத்தில் 2வது முறை.. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒருவர் சிவகார்த்திகேயன், மற்றொருவர் அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

டான் படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. படம் அடுத்த வாரம் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

First published:

Tags: Udhayanidhi Stalin