பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பா.ஜ.கவில் இணைந்த பிரபல டிவி நடிகை!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு, தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பா.ஜ.கவில் இணைந்த பிரபல டிவி நடிகை!
பொன். ராதாகிருஷ்ணன் உடன் நடிகை ஜெயலட்சுமி
  • News18
  • Last Updated: November 6, 2019, 7:32 PM IST
  • Share this:
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்த நடிகை ஜெயலட்சுமி தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஜெயலட்சுமி, மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வரும் ஜெயலட்சுமி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி இன்று தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு, தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்