ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை துனிஷா சர்மா தற்கொலை... லவ் ஜிகாத்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

நடிகை துனிஷா சர்மா தற்கொலை... லவ் ஜிகாத்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

நடிகை துனிஷா சர்மா

நடிகை துனிஷா சர்மா

மும்பை டிவி நடிகை தற்கொலை வழக்கில் காதல் விவகாரம் அம்பலமாகியிருக்கும் நிலையில், புதிய திருப்பமாக லவ் ஜிகாத் சர்ச்சையும் எழுந்துள்ளது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் லவ் ஜிகாத்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை துனிஷா ஷர்மா. இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களைக் கொண்ட துனிஷா வளர்ந்து வரும் இளம் நடிகையாக பார்க்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் நடைபெற்று வந்த Ali Baba: Dastaan-E-Kabul என்ற வெப் தொடரில் நடித்து வந்தார். மதிய உணவு இடைவேளையின்போது சக நடிகரும், காதலனுமான ஷீசன் முகம்மது கான் மேக்கப் அறைக்கு நடிகை சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாஷ் ரூமில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக சக நடிகர் சீஷன் முகம்மது கான் மீது துனிஷாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்குமுன் பிரேக்அப் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சீஷன் கானை கைது செய்து விசாரித்து வந்தனர்.

ஷீசன் கான் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரிந்துதான், துனிஷா பிரேக் அப் செய்ததாகவும், பிரேக் அப் ஆன 15 நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாகவும் துனிஷாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

துனிஷா தற்கொலை செய்துகொண்டபோது கர்ப்பமாக இருப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால் உடற்கூறாய்வில் அவர் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்தது. போலீசார் இதுவரை படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Also read... தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படமும், பரிசுத்த நாடாரின் யாகப்பா திரையரங்கும்!

ஷீசன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தூக்கில் தொங்கியதால்தான் துனிஷா இறந்தார் என்பது உடற்கூறாய்வில் தெளிவாகியிருக்கிறது

இந்நிலையில் மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதம் துனிஷாவின் மரணத்துக்கு லவ் ஜிகாத் காரணமாக இருக்கலாம் என புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார். சதிகாரர்கள் யார், ஷீசன் கான் பின்னால் இருக்கும் அமைப்பு எது எனக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், துனிஷா குடும்பத்தினருக்கு 100 சதவீதம் நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்துக் கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருவதாகவும் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் தற்கொலை வழக்கில் இதுவரை உண்மைகள் அம்பலமாகாத நிலையில், துனிஷா விவகாரத்தில் தற்கொலைக்கான காரணம் தெரியவருமா? என்பது போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime News, Entertainment