தேர்தல் பிஸியிலும் அமீரின் அரசியல் பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்!

news18
Updated: April 16, 2019, 4:39 PM IST
தேர்தல் பிஸியிலும் அமீரின் அரசியல் பட டீசரை வெளியிட்ட டிடிவி தினகரன்!
டிடிவி தினகரனுடன் அமீர்
news18
Updated: April 16, 2019, 4:39 PM IST
அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் தயாரித்து நடித்திருக்கும் படம் அச்சமில்லை அச்சமில்லை. நொய்யல் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளின் பிரச்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை முத்து கோபால் இயக்குகிறார். அமீர் அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கடந்த 12-ம் தேதி படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். ‘நடிகர் சங்கப் பிரச்னையை நாட்டு பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே என்ற அமீர் பேசும் வசனத்துடன் தொடங்கிய இந்த டீசரில் விவசாய பிரச்னை, டாஸ்மாக், மணல் கொள்ளை என பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருந்தன.தற்போது இரண்டாவது டீசரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: தொப்பி, மாலை என இஸ்லாமிய மரபின் படி வந்த ஜெயக்குமார்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...