Home /News /entertainment /

வெங்கட் பிரபுவின் மன்மத லீலைக்கு சிக்கல்

வெங்கட் பிரபுவின் மன்மத லீலைக்கு சிக்கல்

மன்மத லீலை

மன்மத லீலை

பழைய கிளாசிக் திரைப்படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைப்பதை பெரும்பாலான ரசிகர்களும் விரும்புவதில்லை.

மாநாடு படத்தை அடுத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்குவதாக வெங்கட் பிரபு அறிவித்தார். அசோக் செல்வன் நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் பெயரை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மன்மத லீலை  1976-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான திரைப்படம். அதேபெயரை வெங்கட் பிரபு தனது படத்துக்கு வைத்துள்ளார். பழைய படங்களின் பெயரை பயன்படுத்துவது என்றால், அப்படத்தின் தயாரிப்பாளரிடம், அவர் இல்லையென்றால் அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். அந்தக் கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே அத்தலைப்பு ஏற்றுக் கொள்ளப்படும்.

1976-ல் மன்மத லீலை படத்தை கலாகேந்திரா நிறுவனத்தார் தயாரித்திருந்தனர். இந்த நிறுவனத்தாரிடம் அனுமதி பெறாமலே மன்மத லீலை என்ற பெயரை தனது படத்துக்கு வெங்கட் பிரபு வைத்துள்ளது தெரிய வந்ததுள்ளது. கலாகேந்திரா நிறுவனத்தார் தங்கள் படத்தின் பெயரை வெங்கட் பிரபுக்கு விட்டுத்தர தயாராக இல்லை. இதனால், படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே பிரச்சனையை சந்தித்துள்ளது.

Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

பழைய கிளாசிக் திரைப்படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைப்பதை பெரும்பாலான ரசிகர்களும் விரும்புவதில்லை. பழைய படங்களின் பெயரை கூகுகளில் தேடினால் பழைய படங்களுக்குப் பதில் புதிய படத்தின் தகவல்கள், படங்கள் வருகின்றன. பழைய படங்கள் அப்படியே மறக்கடிக்கப்படுகின்றன. இது நாவல்களுக்கும் பொருந்தும். ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்தப் பெயரை தற்போது ஒரு திரைப்படத்துக்கு வைத்துள்ளனர். இது ஜெயகாந்தனின் நாவலை இருட்டிப்பு செய்துவிடும் என அவரது குடும்பத்தினர் நாவல் பெயரை திரைப்படத்துக்கு வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அந்த பெயரிலேயே திரைப்படம் வெளியாகிறது.

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

மன்மத லீலை பாலசந்தரின் கிளாசிக் திரைப்படங்களுள் ஒன்று. அந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் மன்மத லீலை மறக்கடித்துவிடும் என்ற ரசிகர்களின் அச்சத்தில் நியாயம் இல்லாமலில்லை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema, Venkat Prabhu

அடுத்த செய்தி