முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷங்கர் படம் இயக்க தடைகேட்டு லைகா மேல் முறையீடு...!

ஷங்கர் படம் இயக்க தடைகேட்டு லைகா மேல் முறையீடு...!

ஷங்கர்

ஷங்கர்

முதல்கட்டமாக தனி நீதிபதியின் உத்தரவை நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு லைகா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை தலைமை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

  • Last Updated :

இந்தியன் 2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க, ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது லைகா நிறுவனம்.

கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை சில வருடங்கள் முன்பு தொடங்கினார் ஷங்கர். லைகா தயாரிப்பு. படத்தின் பட்ஜெட்டில், ஆரம்பத்திலேயே லைகாவுக்கும், ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிலர் மரணமடைய, படப்பிடிப்பு தடைபட்டது. விபத்துக்கு யார் காரணம் என்பதில், ஒருவரையொருவர் பழி சுமத்திக் கொண்டதும் நடந்தது. கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், இந்தியன் 2 வை கைவிட்டு ராம் சரண் நடிப்பில் தெலுங்குப் படம் ஒன்றை இயக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியன் 2 படத்தை முடிக்காமல், ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என லைகா நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து, ராம் சரண் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ஷங்கர் முழுவீச்சில் தொடங்கினார். இந்நிலையில், ஷங்கர் படம் இயக்க தடைகேட்டு லைகா மேல்முறையீடு செய்துள்ளது.

Also read... அது அல்லவா இது - குழப்பத்தை ஏற்படுத்திய சிம்பு படத்தின் பர்ஸ்ட் லுக்!

முதல்கட்டமாக தனி நீதிபதியின் உத்தரவை நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு லைகா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை தலைமை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

லைகாவின் இந்த மேலமுறையீட்டு மனு விசாரணையின் முடிவில் நீதிபதி அளிக்கும் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒருவேளை ஷங்கருக்கு பாதகமாக அமைந்தால், அவர் ராம் சரண் படத்தை இயக்குவது சிக்கலாகிவிடும்.

First published:

Tags: Director Shankar, Lyca