வெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா!

எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ’ராங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், வெளிநாட்டு போலீசாரால் த்ரிஷா கைது செய்யப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

news18
Updated: May 22, 2019, 7:35 PM IST
வெளிநாட்டு போலீசில் கையும் களவுமாக சிக்கிய த்ரிஷா!
த்ரிஷா
news18
Updated: May 22, 2019, 7:35 PM IST
த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

எங்கேயும் எப்போதும் என்ற தனது முதல் படத்திலேயே வெற்றியைப் பதித்தவர் இயக்குநர் சரவணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கிய சரவணன், கன்னடத்தில் சக்ரவியுகா என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

சில காலம் ஓய்வில் இருந்த சரவணன் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கி வைத்திருந்த கதையை த்ரிஷாவை நாயகியாக வைத்து படமாக்குகிறார் சரவணன். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை இன்று வெளியிட்டுள்ளனர்.அதில் வெளிநாட்டு போலீசாரால் த்ரிஷா கைது செய்யப்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: தென்னிந்திய இயக்குநர்களை புறக்கணிக்கிறதா பாலிவுட் திரையுலகம்?

First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...