அரசியல் தலைவருக்கு சிகிச்சை... சிக்கலில் மாட்டிக் கொண்ட த்ரிஷா! - ’பரமபதம்’ ட்ரெய்லர் வீடியோ

Web Desk | news18
Updated: May 4, 2019, 12:41 PM IST
அரசியல் தலைவருக்கு சிகிச்சை... சிக்கலில் மாட்டிக் கொண்ட த்ரிஷா! - ’பரமபதம்’ ட்ரெய்லர் வீடியோ
த்ரிஷா
Web Desk | news18
Updated: May 4, 2019, 12:41 PM IST
த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு பட ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் த்ரிஷாவின் 60-வது படமான பரமபதம் விளையாட்டு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். .

படத்தின் ட்ரெய்லர் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் த்ரிஷா, “மே 4-ம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷலான நாள். என்னுடைய பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்ன்னு
சொல்லலாம். என்னுடைய 60-வது படமான "பரமபதம் விளையாட்டு" படத்தோட ட்ரெய்லர் மற்றும் செகண்ட் லுக் ரிலீஸ் பண்றோம்.

‘பரமபதம் விளையாட்டு’இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம். இந்த ஜானரில் என்னோட முதல் படம். ஒரு இரவில், காட்டுக்குள் நடக்குறது தான் முழு படமும் . கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பிலுள்ள ரசிகர்களுக்குமான படமா இருக்கும். ‘பரமபதம் விடையாட்டு’ அனைத்தும் கலந்த த்ரில்லர், ஆக்‌ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் இருக்கு. படத்தின் ட்ரெய்லர் குறித்த உங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.வீடியோ பார்க்க: மீண்டும் இணையும் ஷங்கர் - விஜய் கூட்டணி!

First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...