தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அப்பாவுக்கு பிடிக்காத கடைசி மகனான விஜய், தொழிலில் ஏற்படும் சிக்கல்களை சமாளித்து அப்பாவுக்கு சரியான வாரிசு என நிரூபிக்கிறார் என்பதே படத்தின் கதை. காட்சிகளை முன்பே கணிக்கக்கூடியதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக விஜய்யை பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
துணிவு படத்துடன் வாரிசு படம் வெளியாகியுள்ளதால் முதல் நாள் வசூல் எவ்வளவு, மொத்த வசூல் எவ்வளவு என இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் நேற்றிரவு நடைபெற்றபோது, பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படம் பார்த்து தங்களது விமர்சனங்களைப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நடிகை திரிஷா ரசிகர்களோடு ரசிகராக சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்த்துள்ளார். ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின்போது பின் வரிசையில் நின்றுகொண்டு வைப் செய்த வீடியோ சமூக வலைளங்களில் வைரலாகிவருகிறது.
திரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களோடு வாரிசு படம் பார்த்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராங்கி பட புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்ற திரிஷாவிடம், வாரிசா துணிவா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திரிஷா, இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. இரண்டு படங்களையும் தியேட்டரில் பார்ப்பேன் என பதிலளித்தார்.
#Trisha sir Trisha 😍😍😍😍😍 Behind me 😭 Watch Thalapathy she says haha 😍 #Varisu #ThalapathyVijay #Thalapaathy67 @trishtrashers @actorvijay pic.twitter.com/2l65uxP66n
— Prithvi krishna (@prithvikrish) January 11, 2023
பொங்கல் விடுமுறை ஒரு வாரத்துக்கு மேல் இருப்பதால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் - ஜில்லா படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. அந்த நிலைதான் இப்பொழுதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.