ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் ஏகே62 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா?

அஜித்தின் ஏகே62 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா?

த்ரிஷா - அஜித்

த்ரிஷா - அஜித்

‘ஏகே 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அஜித்தின் ஏ.கே-62 படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படமான ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தை, ஜனவரி 2023-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோதுமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ‘துணிவு’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதற்கான முதற்கட்ட அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுவினர் மற்றும் தயாரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    படத்தின் ஸ்கிரிப்டை விக்னேஷ் சிவன் முடித்துவிட்டதாகவும், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பிப்ரவரி 2023-ல் தொடங்கும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, நடிகை த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தோனி தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன்... ஹீரோ யார் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த செய்தி உண்மையானால், ‘ஜீ’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து த்ரிஷா அஜித்துடன் நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Trisha, Ajith