ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் - அஜித் இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் த்ரிஷா?

விஜய் - அஜித் இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் த்ரிஷா?

விஜய் - அஜித் - த்ரிஷா

விஜய் - அஜித் - த்ரிஷா

த்ரிஷா கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் ‘தி ரோட்’ படத்தில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை த்ரிஷா, ஒரே நேரத்தில் விஜய் - அஜித் இருவருடனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக வலம் வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் பாக்ஸ் ஆபிஸில் முன்னணியில் உள்ளனர். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியப் படங்களின் மூலம் விஜய்-அஜித் இருவரும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். இரண்டு படங்களும் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித் இருவரும் முறையே தற்காலிகமாக 'தளபதி 67' மற்றும் 'ஏகே 62' என்று பெயரிடப்பட்ட அடுத்த படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

புதிய தகவல்களின்படி, ‘ஏகே 62’ படத்தின் தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவை அணுகியுள்ளார்களாம். இந்தத் தகவல் உண்மையானால் ’ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு அஜீத்தும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் ஐந்தாவது படமாக இது இருக்கும். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 62’ படப்பிடிப்பு பிப்ரவரி 2023-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 67’ படத்திற்காக விஜய்யுடன் த்ரிஷா ஒப்பந்தமாகியிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. இது நடக்கும் பட்சத்தில் திரிஷா 14 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ‘தளபதி 67’ மற்றும் ‘ஏகே 62’ ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

விஜய்யுடன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த வில்லன் நடிகர்!

த்ரிஷா கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் ‘தி ரோட்’ படத்தில் நடித்து வருகிறார். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ள ‘ராங்கி’ படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Ajith, Trisha