சாதாரண மஞ்சள் குர்தா இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை - விருதுகளுடன் த்ரிஷா

சாதாரண மஞ்சள் குர்தா இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை - விருதுகளுடன் த்ரிஷா
நடிகை த்ரிஷா
  • News18 Tamil
  • Last Updated: December 24, 2019, 11:10 PM IST
  • Share this:
'96' படத்துக்காக 11 விருதுகளைப் பெற்றிருப்பதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்திருந்தனர். பள்ளிப்பருவக் காதலைப் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றிருக்கும் த்ரிஷா, 96 படத்துக்காக 11 விருதுகள் பெற்றிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் Hey Jude படத்துக்காக 3 விருதுகளையும் வென்றிருப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் 96 படத்தில் ஜானு கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கும் த்ரிஷா, ஜானு கதாபாத்திரத்துக்காக எனக்கு கிடைத்த அன்பு அதிகமானது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. மிகச் சிறந்த கதாபாத்திரம் என்று எனக்குத் தெரியும். அதை நான் உணர்ந்தேன். ராமையும் ஜானுவையும் ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. சாதாரணமான மஞ்சள் குர்தா இந்த அளவுக்கு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஜெஸ்சிக்குப் பின் ஜானு கேரக்டர் தான் அதிகம் பேசப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க: பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி - போலீசார் தீவிர விசாரணை
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading