Home /News /entertainment /

Thalapathy 67: விஜய்யின் தளபதி 67-ல் மூன்று நடிகைகள்?

Thalapathy 67: விஜய்யின் தளபதி 67-ல் மூன்று நடிகைகள்?

விஜய்

விஜய்

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் அவருடன் 3 நடிகைகள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் 'தளபதி 67' படத்தில் இணைவது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதோடு சமந்தா வில்லியாக நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் அதிரடி காட்சிகளில் நடித்திருந்தார் சமந்தா. அதன்படி, தளபதி 67 படத்தில் சமந்தா சில சண்டைக் காட்சிகளில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, நடிகர் விஜய் தற்போது தனது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இதனை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதற்கிடையே அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி