ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Trisha: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் த்ரிஷாவின் அரசியல் படம்!

Trisha: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் த்ரிஷாவின் அரசியல் படம்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா 1983 மே 4ம் தேதி சென்னையில் பிறந்தவர். அவருக்கு வயது 38

20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகை திரிஷா 1983 மே 4ம் தேதி சென்னையில் பிறந்தவர். அவருக்கு வயது 38

த்ரிஷா நடித்திருக்கும் பரமபத விளையாட்டு திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  த்ரிஷா நடித்திருக்கும் பரமபத விளையாட்டு திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

  கொரோனா லாக்டவுன் காலத்தில் பலனடைந்த துறைகளில் ஒன்று ஓடிடி. இந்தியாவில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவாகவே இருந்தது. கொரோனாவால் வீடுகளில் முடங்கிய மக்கள் ஓடிடியை அதிகம் பயன்படுத்தினர். லாக் டவுன் முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகும் முன்னணி நடிகர்களின் படங்கள் தவிர்த்து பிற படங்களை, திரையரங்கில் பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

  தொலைக்காட்சி, ஓடிடி என தயாரிப்பாளர்கள் தங்கள் கவனத்தை திருப்ப ஆரம்பித்தனர். நேற்று கூட கதிரின் சர்பத் திரைப்படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியானது. ஏப்ரல் 14 ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் எம். இயக்கியிருக்கும் வணக்கம்டா மாப்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

  த்ரிஷா நடித்திருக்கும் அரசியல் படமான பரமபத விளையாட்டு 2020 பிப்ரவரி 28 வெளியாவதாக இருந்தது. கடைசிநேரத்தில் வெளியீட்டை தள்ளி வைத்தனர். இப்போது வரை படம் திரைக்குவரும் வழியைக் காணோம். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் படத்தை நேரடியாக வெளியிடுகின்றனர். திருஞானம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  இது தவிர த்ரிஷா கைவசம் 4 படங்கள் உள்ளன. இதில் பல படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அத்துடன் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் அவர் நடித்து வருவது முக்கியமானது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Trisha