உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படத்தில் த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.
த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அளித்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
முன்னணி ஹீரோயினாக இருக்கும் த்ரிஷா மிகவும் கவனமாக படங்களை தேர்வு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து சில காட்சிகளில் மட்டுமே வந்த த்ரிஷா கவனத்தை ஈர்த்தார்.
இதையும் படிங்க - மிஷ்கினின் பிசாசு 2 டீசர் தேதி அறிவிப்பு… 4 மொழிகளில் வெளியாகிறது
அவரது நடிப்பில் உருவாகி வரும் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் முதல்பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
— Trish (@trishtrashers) March 2, 2022
They call me Señorita🤭#Mexico pic.twitter.com/eMgruFi0uB
— Trish (@trishtrashers) March 16, 2022
இந்நிலையில் புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு ‘தி ரோட்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
— Trish (@trishtrashers) April 25, 2022
50 நாட்களில் படத்தை எடுத்து முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் த்ரிஷாவுடன் சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கைதி படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இதற்கு கதை எழுதியவர் எச். வினோத் என்பதால் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.
வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா ஒரு வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த தொடரில் போலீஸ் கேரக்டரில் இடம் பெறுகிறார் த்ரிஷா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha