• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Trisha: 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கன்னடத்தில் த்ரிஷா!

Trisha: 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கன்னடத்தில் த்ரிஷா!

த்ரிஷா

த்ரிஷா

இதற்கு முன் 2014-ல் புனித் ராஜ்குமார் ஜோடியாக பவர் என்ற படத்தில் த்ரிஷா நடித்தார்.

  • Share this:
    லூசியா, யு டர்ன் போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கிய பவன் குமாரின் புதிய படம், த்விட்வா (Dvitva). இதில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இதுவொரு கன்னடப் படமாகும்.

    இந்த மாத ஆரம்பத்தில் த்விட்வா பட அறிவிப்பை வெளியிட்டனர். புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஹம்பிள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. பவன் குமார் இயக்கம். இதுவொரு சைக்கலாஜிகல் த்ரில்லர். பவன் குமார் வித்தியாசமான திரைக்கதையில் படங்களை தருகிறவர் என்பதால் புனித் ராஜ்குமார் - பவன் குமார் காம்பினேஷனுக்கு கர்நாடகாவில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு முன் 2014-ல் புனித் ராஜ்குமார் ஜோடியாக பவர் என்ற படத்தில் த்ரிஷா நடித்தார். அது அவரது முதல் கன்னடப்படம். தெலுங்கு தூக்குடு படத்தின் ரீமேக்தான் இந்த பவர். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் பவரில் த்ரிஷா நடித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    7 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இதிலும் நாயகன் அதே புனித் குமார். த்ரிஷா இருப்பதால் இந்தப் படம் தமிழிலும் வெளியாக வாய்ப்புள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: