• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Trisha: த்ரிஷாவுக்கு கல்தா - மோகன்லாலின் புதிய படத்தை தொடங்கிய ஜீத்து ஜோசப்!

Trisha: த்ரிஷாவுக்கு கல்தா - மோகன்லாலின் புதிய படத்தை தொடங்கிய ஜீத்து ஜோசப்!

ஜீத்து ஜோசப் - த்ரிஷா - மோகன்லால்

ஜீத்து ஜோசப் - த்ரிஷா - மோகன்லால்

மோகன்லால், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவெல்த் மேன் என்ற படத்தில் நடிக்கிறார். இது முற்றிலும் புதிய கதை. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் தனது ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் இதனை தயாரிக்கிறார்.

  • Share this:
    மோகன்லால், த்ரிஷா நடிப்பில் தொடங்கப்பட்ட படத்தை கைவிட்டு, மோகன்லால் நடிப்பில் புதிய படத்தை அறிவித்துள்ளார் ஜீத்து ஜோசப்.

    த்ரிஷ்யம் 2 படத்தை முடித்ததும், அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் ஜீத்து ஜோசப். அடுத்து மலையாளத்தில் அவர் தொடங்கிய படம் ராம். த்ரில்லர் கதையான இதில் மோகன்லால், த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சமீபத்தில் பேட்டியளித்த மோகன்லால், லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டு, படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும், முதலில் ஜீத்து ஜோசப் படத்தில் நடிக்கயிருப்பதாக தெரிவித்தார். அவர் ராம் படத்தை குறிப்பிடுவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால், நடந்தது வேறு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மோகன்லால், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவெல்த் மேன் என்ற படத்தில் நடிக்கிறார். இது முற்றிலும் புதிய கதை. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் தனது ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் இதனை தயாரிக்கிறார். அப்படியானால் த்ரிஷா நடிப்பதாக இருந்த ராம் படத்தின் கதி? டுவெல்த் மேன் முடிந்ததும் ராம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குவார் என்கிறார்கள்.

    ராம், டுவெல்த் மேன் படங்கள் தவிர த்ரிஷ்யம் 3 படத்திலும் மோகன்லால் நடிக்கயிருக்கிறார். அடுத்த மூன்று வருடங்களில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மட்டும் ஐந்து படங்களில் நடிக்க மோகன்லால் ஒத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: