அரசியலுக்கு வருவதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என மறுத்துள்ளார் நடிகை த்ரிஷா.
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ஹீரோயினாக இருக்கும் த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியுடன் 2022 ஆம் ஆண்டை சிறப்பாக முடிக்கிறார். அடுத்ததாக அவர் விஜய் - அஜித் என இருவருடனும் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுவதால், 2023-ஆம் ஆண்டும் அவருக்கும் ஜெயம் தான். சில மாதங்களுக்கு முன்பு, த்ரிஷா அரசியலில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், எந்த கட்சியில் சேருவது என்பதை அவர் இறுதிப் படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது தனது ராங்கி படத்தை விளம்பரப்படுத்தி வரும் த்ரிஷா, இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, அரசியல் குறித்து வெளியான தகவல் வதந்தி என நிராகரித்தார். மேலும் இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை என்று கூறிய அவர் தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
இது மட்டுமின்றி த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு, திருமணம் குறித்த கேள்விகளை புறக்கணிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தார் த்ரிஷா. விமர்சனங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பேசிய அவர், நேர்மறையான கருத்துகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், எதிர்மறையானவற்றை புறக்கணிப்பதாகவும் கூறினார்.
உலகளவில் 7000 கோடி வசூலை குவித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!
அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படம், 2022 டிசம்பர் 30 அன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தை எம் சரவணன் இயக்கியுள்ளார். இதில் த்ரிஷா கிருஷ்ணனுடன் இணைந்து அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha