ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

த்ரிஷாவின் பிருந்தா சீரிஸ்.. படப்பிடிப்பு முடிந்தது.. ரிலீஸ் எப்போது?

த்ரிஷாவின் பிருந்தா சீரிஸ்.. படப்பிடிப்பு முடிந்தது.. ரிலீஸ் எப்போது?

த்ரிஷா

த்ரிஷா

'பிருந்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் 16 முதல் தொடங்கப்பட்டது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை த்ரிஷாவின் நடிப்பில் இயக்குநர் சூர்யா வங்கலா இயக்கத்தில் உருவாகியுள்ள பிருந்தா சீரிஸின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.

சோழ சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரம் மிக்க பெண் குந்தவை. சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும், அருள்மொழிவர்மனின் மூத்த சகோதரியும் ஆவாள். சோழர் வரலாற்றில் இளவரசி குந்தவை அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் அதற்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அரண்மனை முடிவுகளில் குந்தவை முக்கியமான பங்காற்றுவார். அந்த கதாப்பாத்திரத்தில் த்ரிஷா தனது நடிப்பை பிரமாதகாம வெளிபடுத்தினார் என்றும் விமர்சனங்கள் வந்தது.

பொன்னியின் செல்வன் படத்த்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் ஏறுமுகமாகி உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியால் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா.

புதிதாக நடிப்பதற்கு கதைகள் கேட்டு வந்தார் த்ரிஷா. இதில் வெப் சீரிஸ் ஒன்றின் கதை த்ரிஷாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பணிகள் தொடங்கப்பட்டன. தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கியுள்ளார்.

'பிருந்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் 16 முதல் தொடங்கப்பட்டது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. படக்குழு அதுகுறித்த தகவலை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... லஜ்ஜாவதியே இசை.. ரீல்ஸில் வைரலாகும் தெம்மா தெம்மா பாடல்.. திடீர் வைரலுக்கு என்ன காரணம்

பிருந்தா வெப்சீரிஸை அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தினேஷ்.K.பாபு ஒளிப்பதிவு செய்யும் பிருந்தா வெப் சீரிஸ்க்கு சக்தி காந்த் கார்த்திக் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிருந்தா வெப் சீரிஸின் பாடப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள த்ரிஷா வெப்சீரிஸின் முதல் சீசன் விரைவில் வெளிவர தயாராகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Trisha