அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் த்ரிஷாவின் ‘கர்ஜனை’ - ட்ரெய்லர் வீடியோ

news18
Updated: August 21, 2019, 7:50 PM IST
அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் த்ரிஷாவின் ‘கர்ஜனை’ - ட்ரெய்லர் வீடியோ
கர்ஜனை டீசரில் த்ரிஷா
news18
Updated: August 21, 2019, 7:50 PM IST
த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா, அமித், வம்சிகிருஷ்ணா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ஜனை. இந்தப் படத்தை செஞ்சுரி இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே மைனா, சாட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.


'இவங்களுக்கு பயந்து உயிரை விடனுமா? என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த டீசரில் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடிகை த்ரிஷா ஆக்‌ஷன் கலந்த காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க: மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!

Loading...வீடியோ பார்க்க: அடுத்தடுத்து தயாராகும் மெகா பட்ஜெட் படங்கள்

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...