Home /News /entertainment /

Happy Birthday Trisha: 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை... எவர் க்ரீன் பியூட்டி த்ரிஷாவின் பிறந்தநாள்!

Happy Birthday Trisha: 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை... எவர் க்ரீன் பியூட்டி த்ரிஷாவின் பிறந்தநாள்!

த்ரிஷா

த்ரிஷா

‘கில்லி’ மெகா ஹிட் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. தனலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் தாவணி போட்ட தீபாவளியாய் மனசெல்லாம் கொள்ளை கொண்டார் த்ரிஷா.

    தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் பியூட்டி த்ரிஷா. இன்று அவரின் 39-வது பிறந்தநாள். 

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக நிலைத்து நின்று ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் த்ரிஷா. 1999-ல் வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான த்ரிஷாவை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அமீரின் ‘மெளனம் பேசியதே’ திரைப்படமும் ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ திரைப்படமும்.

    ’மனசெல்லாம்’, ’எனக்கு 20 உனக்கு 18’, ‘சாமி’ என த்ரிஷா அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அவரை திரை ரசிகர்களின் மனசெல்லாம் நிறைய வைத்தது. ’சாமி’ திரைப்படத்தில் விக்ரமுடன் ’கல்யாணம் தான் கட்டிக்கிட்டு’ பாடலில் ஆட்டம் போட்ட த்ரிஷாவை, ‘இதுதானோ இதுதானோ’ பாடலில் ஞாயிற்று கிழமையின் காதல் கொஞ்சல்களை சொன்ன த்ரிஷாவை, காதல் கொள்ள ஆரம்பித்தது தமிழ் சினிமா.

    விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் நாயகி ஆனார் த்ரிஷா. விஜய்யுடன் ’கில்லி’, ‘திருப்பாச்சி’, ’ஆதி’, ’குருவி’ அஜித்துடன் ‘ஜீ’ என நடித்து அவர்கள் இருவரின் ரசிகர்களையும் தன் விசிறி ஆக்கினார். குறிப்பாக ‘கில்லி’ மெகா ஹிட் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. தனலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் தாவணி போட்ட தீபாவளியாய் மனசெல்லாம் கொள்ளை கொண்டார் த்ரிஷா.

    அன்பு அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கிராமத்துப் பெண்ணாக ‘உனக்கும் எனக்கும்’, தந்தையின் அளவுகடந்த அன்பால் திணறும் மகளாக ‘அபியும் நானும்’, விவாகரத்தான பெண்ணாக ஒரு குழந்தைக்குத் தாயாக ’என்னை அறிந்தால்’ உட்பட பல திரைப்படங்கள் த்ரிஷாவின் அழகையும் நடிப்பையும் அரங்கேற்றியது.

    இந்தி நல்ல மொழி... இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்... நாம் அதை கற்றுக் கொள்ள வேண்டும் - சுஹாசினி மணிரத்னம்

    த்ரிஷாவின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது கெளதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இத்திரைப்படத்தில் இவரின் ‘ஜெஸ்ஸி’ கதாபாத்திரம் கார்த்திக்கால் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டது. சேலை கட்டிய தேவதையாய், சுடிதார் அணிந்த வெண்ணிலவாய் ரசிக மனத்தை கொண்ணை கொண்டார் த்ரிஷா.

    ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போலவே அமைந்தது விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘96’. படம் முழுக்க மஞ்சள் நிற சுடிதாரில் மட்டுமே தோன்றி ‘ஜானு’ என்னும் கதாபாத்திரத்தில் லயிக்க செய்தார் த்ரிஷா.

    Vanitha Vijayakumar: பிரபலங்கள் கலந்துக் கொண்ட வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ் தொடக்க விழா!

    கமல், விக்ரம், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என அனைவருடனும் நடித்து ஹிட் கொடுத்த த்ரிஷாவுக்கு, ரஜினிகாந்துடன் நடிப்பது மட்டுமே கனவாய் இருந்தது. ஒரு சிறிய வேடத்தில் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்து அந்த கனவையும் நினைவாக்கினார் த்ரிஷா.

    தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்கள் அரிதினும் அரிது. அதிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாய் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சென்னை பெண் த்ரிஷா பேரழகோடு கூடிய பேரதிசயமே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Trisha, Tamil Cinema

    அடுத்த செய்தி