• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோல்டன் விசா - மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா...!

கோல்டன் விசா - மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா...!

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை 2 இன்னும் வெளியாகாமல் உள்ளது. கர்ஜனை உள்பட வேறு சில படங்களும் வெளியாக உள்ளன. இவையனைத்தையும்விட மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வனையே அவர் அதிகம் எதிர்பார்க்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐக்கிய அமீரக அரசு இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா அளித்து வருகிறது. இந்த சிறப்பு விசாவை தமிழில் முதல் நடிகையாக த்ரிஷா பெற்றுக் கொண்டார்.

அரபு நாடுகள் குறைந்து வரும் எண்ணைய் வளத்தின் காரணமாக தங்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றன. அரபு நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கையில்  75 சதவீதம் பேர் உள்நாட்டைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்திருக்கின்றன. இதனால், வெளிநாடுகளில் இருந்து அங்கு வேலைக்கு சென்றிருக்கும் பலரும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். வேளாண்மை செய்யவும் அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இவையெல்லாம் உதிரிகள். சுற்றுலாதான் அவர்களின் குறிக்கோள். துபாய் சுற்றுலாவை பெருமளவு ஊக்குவித்து வருகிறது. உலகில் உள்ள பணம் படைத்தவர்கள்தான் அவர்களின் இலக்கு. அவர்களை ஈர்க்கும்வகையில் கோல்டன் விசாவை விஐபிகளுக்கு அளித்து வருகிறது. இதுவொரு கௌரவம்.



மலையாளத்தின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவருக்கும் கோல்டன் விசாவை ஐக்கிய அமீரக அரசு அளித்தது. தற்போது த்ரிஷாவும் கோல்டன் விசா பெற்றுள்ளார். இதுபற்றி கூறியிருக்கும் த்ரிஷா, கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமை என்றிருக்கிறார்.

Also read... இந்த படத்துக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை... ஜெய் பீமை பாராட்டிய நடிகர் சூரி!

த்ரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை 2 இன்னும் வெளியாகாமல் உள்ளது. கர்ஜனை உள்பட வேறு சில படங்களும் வெளியாக உள்ளன. இவையனைத்தையும்விட மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வனையே அவர் அதிகம் எதிர்பார்க்கிறார். அடுத்த வருடம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: