• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளிவரும் மின்னல் முரளி - தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளிவரும் மின்னல் முரளி - தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

மின்னல் முரளி

மின்னல் முரளி

Tovino Thomas: டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியிருக்கும் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி.

  • News18
  • Last Updated :
  • Share this:
சினிமாத்துறை மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. திரையரங்குகளும், ஓடிடி தளங்களும் போட்டிப் போட்டு பட அறிவிப்பை வெளியிடுகின்றன. எங்கள் படம் சக்சஸ் என்று, ஓடிடியில் வெளியான டிக்கிலோனாவுக்கு சக்சஸ் பார்ட்டி நடத்துகின்றனர். எங்கப் படமும்தான் சக்சஸ் என திரையரங்கில் வெளியான கோடியில் ஒருவனுக்கும் சக்சஸ் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். வலிமை பொங்கல் வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தீபாவளிக்கு மகானை கொண்டுவர முயற்சி நடக்கிறது. 

இதனிடையில் நெட்பிளிக்ஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பான் - இந்தியா திரைப்படமான மின்னல் முரளி கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24 வெளியாகும் என அறிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியிருக்கும் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் மின்னல் முரளி. சாதாரண கிராமத்து இளைஞனான முரளிக்கு மின்னல் தாக்கிய பின் அபூர்வ சக்தி கிடைக்கிறது. அதைப் பின்னணியாக வைத்து இந்தப் படத்தை பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.



இதன் டீஸர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், நெட்பிளிக்ஸ் இதன் ஓடிடி உரிமையை வாங்கியது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மின்னல் முரளி வெளியாகிறது.

Also read... 10 கோடியில் ஒரு சண்டைக்காட்சி - ஷங்கரின் மெகா ப்ளான்...!

குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன், அஜு வர்க்கீஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். வீக்என்ட் பிளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மின்னல் முரளி டிசம்பருக்கு தள்ளிப்போனதில் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: