Home /News /entertainment /

டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் மர்ம நபர்கள் தாக்குதல்

டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் மர்ம நபர்கள் தாக்குதல்

டோவினோ தாமஸ்

டோவினோ தாமஸ்

தற்போது 2493 எப்.டி. என்ற படத்தில் நடித்து வருகிறார் டோவினோ தாமஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார்.

    மலையாள நடிகர் டோவினோ தாமஸின் 2493 எப்.டி படப்பிடிப்பில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது மாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் அவர் இணைந்து நடித்த வாஷி திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில் தற்போது 2493 எப்.டி. என்ற படத்தில் நடித்து வருகிறார் டோவினோ தாமஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஓம் சாந்தி ஓசானா, ஒரு முத்தாசி கதா, சாராஸ் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோட்டயம் அருகில் உள்ள பஞ்சிபாலத்தில் நடந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

    இதற்கிடையே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் 2493 எப்.டி படப்பிடிப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது மேக்கப் மேன் மிதுன் ஜித் என்பவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். அவர் மீது பலமாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். எதற்காக இந்த தாக்குதல் எனத் தெரியவில்லை. தற்போது இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி