ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vadivelu : வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..

Vadivelu : வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

Comedy Actor Vadivelu : வடிவேலு பீல்டில் இல்லாத போதும் அவரது படங்களை வைத்தே மீம்கள் உருவாக்கப்பட்டன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு திரும்புகிறார் வடிவேலு. அவரிடம் தமிழின் முன்னணி இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர்

  வடிவேலின் காமெடிகளுக்காக படங்கள் ஓடியது ஒருகாலம். அவர் பீல்டில் இல்லாத போதும் அவரது படங்களை வைத்தே மீம்கள் உருவாக்கப்பட்டன. சமூகவலைத்தளம் வடிவேலு இல்லாமல் ஒருபோதும் இயங்கியதில்லை. கான்ட்ராக்டர் நேசமணி என்ற அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் செய்ததும் நடந்தது.

  வடிவேலு மீண்டும் நடிக்க வந்த நிலையில் அவரிடம் கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ மேனன் போன்ற முக்கியமான இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர். அதேபோல் இளம் இயக்குனர்கள் மாரி செல்வராஜ், காக்கா முட்டை மணிகண்டன் ஆகியோரும் கால்ஷீட் கேட்டுள்ளனர். இவர்கள் நகைச்சுவையைத் தாண்டி முக்கியமான வேடத்தில் வடிவேலை நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டுள்ளனர்.

  also read : நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..

  வடிவேலு மறுபடியும் நடிக்க வந்த நிலையில், நலன் குமாரசாமி அவரிடம் பேசியுள்ளார். ஆர்யா சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படத்தை முடித்த பின் வடிவேலுவை நாயகனாக்கி அடுத்தப் படத்தை எடுக்க அவர் கால்ஷீட் கேட்டுள்ளார். சூதுகவ்வும் முடிந்த போதே வடிவேலுவை நாயகனாக்கி அவர் படம் இயக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

  இவர்களைப் போல் இன்னும் பலர் வடிவேலுவை வைத்து படம் செய்ய காத்திருக்கிறார்கள். நாய் சேகர் வெளியானதும் வடிவேலு நடிக்கும் படங்கள் வெள்ளமாக வர உள்ளது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor Vadivelu