தள்ளிப்போன மிஷன் இம்பாஸிபிள் 7 - டாம் க்ரூஸ் ரசிகர்கள் ஏமாற்றம்!

மிஷன் இம்பாஸிபிள் 7

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரு படங்களின் ரிலீஸ் தேதியும் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனதால் டாம் க்ரூஸின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஏழாவது பாகம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஹாலிவுட்டின் பழைய சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ். புதிதாக பலர் வந்த போதிலும் டாம் க்ரூஸுக்கு இருக்கும் மதிப்பு குறையவில்லை. அதிலும், அவரது மிஷன் இம்பாஸிபிள் சீரிஸ் வெளியாகும்போது உலகமெங்கும் உள்ள ஆக்ஷன் பட விரும்பிகள் சுறுசுறுப்படைவார்கள். ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் நடிக்கக் கூடியவர் டாம் க்ரூஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரது மிஷன் இம்பாஸிபிள் சீரிஸ் உலகப் புகழ்பெற்றது. இதன் முதல் பாகம் 1996 இல் வெளியானது. டாம் க்ரூஸ் இதில் ஈதன் ஹன்ட் என்ற உளவாளியாக நடித்திருந்தார். அவருக்கென ஒரு டீம் உண்டு. அவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட அதற்கு யார் காரணம் என்பதை இறுதியில் கண்டுபிடிக்கிறார். இதில் வில்லனைப் போல் மாஸ்க் அணிந்து அவர் ஏமாற்றும் இடம் பிரசித்தம். தொடர்ந்து வந்த 5 படங்களிலும் ஈதன் ஹன்டுக்கு இப்படி முகத்தை மாற்றி உண்மையை கண்டறியும் காட்சி உண்டு. அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்த காட்சி அது.மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் அடிநாதம், ஆக்ஷன். ஜேம்ஸ் பாண்ட் போலதான் ஈதன் ஹன்ட். விதவிதமான கார்கள், நவீன தொழில்நுட்பக் கருவிகள் என்று படம் மிரள வைக்கும். ஒரே வித்தியாசம் ஜேம்ஸ் பாண்ட் களத்தில் தனி நபராக இயங்குகிறவர். ஈதன் ஹன்ட் தனது டீமுடன் செயல்படுகிறவர்மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் 7 வது பாகத்தின் வெளியீட்டை கொரோனா காரணமாக அடுத்த வருடம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது பாராமவுண்ட் பிக்சர்ஸ்.

Also read... பாலா, சூர்யா, யுவன் - ஒன்றிணையும் நந்தா கூட்டணி...!

இதனால், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் டாம் க்ரூஸின் ரசிகர்கள். இவர் நடிப்பில் நவம்பர் 19 வெளியாகவிருந்த டாப் கன் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டையும் அடுத்த வருடம் மே 27 க்கு தள்ளி வைத்துள்ளனர்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரு படங்களின் ரிலீஸ் தேதியும் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனதால் டாம் க்ரூஸின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: