• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா பேரிடர் காலத்தில் யுஎஸ்ஸில் அதிக ஓபனிங்கை பெற்ற 10 திரைப்படங்கள்!

கொரோனா பேரிடர் காலத்தில் யுஎஸ்ஸில் அதிக ஓபனிங்கை பெற்ற 10 திரைப்படங்கள்!

அதிகம் வசூலித்த படங்கள்

அதிகம் வசூலித்த படங்கள்

இந்த பேரிடர் காலத்தில் யுஎஸ்ஸில் பிளாக் விடோ திரைப்படமே 80.37 மில்லியன் டாலர்கள் வசூலுடன் அதிக ஓபனிங்கை பெற்று முதலிடத்தில் இருந்தது.

  • Share this:
    யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்த பேரிடர் காலத்தில் வெளியான படங்களில் சிறப்பான ஓபனிங்கை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது வெனம் படத்தின் இரண்டாவது பாகம்.

    டாம் ஹார்டி நடிப்பில் உருவான வெனம் படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை வெனம் - லெட் தேர் பி கார்னேஜ் என்ற பெயரில் எடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ், ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் படம் வெளியானது. இந்த மாதம் 13-ஆம் தேதிக்கு மேல் அதிக நாடுகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அக்டோபர் 14 தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

    இந்த பேரிடர் காலத்தில் யுஎஸ்ஸில் பிளாக் விடோ திரைப்படமே 80.37 மில்லியன் டாலர்கள் வசூலுடன் அதிக ஓபனிங்கை பெற்று முதலிடத்தில் இருந்தது. அதனை வெனம் 2 முறியடித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இது 90.10 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

    பேரிடர் காலத்தில் அதிக ஓபனிங்கை பெற்ற முதல் பத்து திரைப்படங்கள்.

    Top 10 Most Opening Movies in the US During the Corona Disaster, The Suicide Squad, Free Guy, Space Jam 2, Godzilla vs Kong, Jungle Cruise, A Quiet Place 2, F9, Shang Chi, Black Widow, Venom 2
    வெனோம்


    10. The Suicide Squad - 26.21 மில்லியன் டாலர்கள்

    09. Free Guy - 28.37 மில்லியன் டாலர்கள்

    08. Space Jam 2 - 31.05 மில்லியன் டாலர்கள்

    07. Godzilla vs Kong - 31.63 மில்லியன் டாலர்கள்

    06. Jungle Cruise - 35.02 மில்லியன் டாலர்கள்

    05. A Quiet Place 2 - 47.55 மில்லியன் டாலர்கள்

    04. F9 - 70.04 மில்லியன் டாலர்கள்

    03. Shang Chi - 75.39 மில்லியன் டாலர்கள்

    02. Black Widow - 80.37 மில்லியன் டாலர்கள்

    01. Venom 2 - 90.01 மில்லியன் டாலர்கள்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: