ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார் கிருஷ்ணா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை காலமானார் கிருஷ்ணா. அவருக்கு வயது 79 . அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

  தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

  முன்னதாக, 79 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். அத்துடன் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தவர் நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Mahesh babu