இன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..!

ஒரு காரியத்தை மாற்றி செய்யும் பொழுது அது ரசிகர்களால் வசீகரிக்கப்படுவதே ரஜினியின் ரகசியம்..!

இன்று 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் : ரஜினியின் வசீகரத்திற்கு காரணம் இதுதான்..!
நடிகர் ரஜினி
  • News18
  • Last Updated: December 12, 2019, 7:16 AM IST
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 44 ஆண்டுகளை கடந்து தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் ஸ்டைல் ஐகான் ரஜினிகாந்தின் வெற்றி ரகசியம் குறித்து அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் சுவாரஸ்மான விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் இரும்பு கேட்டை ரஜினி திறந்த ஸ்டைலில் வசீகரீக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து 44 ஆண்டுகளாக அதே ஈர்ப்புடன் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த வசீகரத்தின் ரகசியம் என்ன என  பகிர்கிறார் காலா, கபாலி ஆகிய திரைப்படங்களில் ரஜினிகாந்தை இயக்கிய பா ரஞ்சித்.

”படப்பிடிப்பு தளத்திற்கு நடிக்க வந்துவிட்டால் ரஜினிக்கு சொல்லிக்கொடுக்கும் வசனங்களை கவனமாக கேட்டு அதனையும் மெருகேற்றி தனக்கே உரித்தான ஸ்டைலில் கடகடவென கொட்டி விடுவது அவரது தொழில் நேர்த்தி” என்கிறார் பா. ரஞ்சித்
1996ஆம் ஆண்டு தொடங்கி ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு குறித்த பேச்சு தமிழகத்தில் பரவலாக நிலவி வந்தாலும் அண்மையிலேயே ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை அறிவித்திருந்தார். ஆனால் கபாலி காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கும்போதே கட்சி தொடங்கும் எண்ணத்துடனே ரஜினிகாந்த் இருந்ததாக சொல்கிறார் ரஞ்சித்.

படப்பிடிப்பிற்கு வந்து விட்டால் ஆளே மாறிவிடுவார். படப்பிடிப்பில் நடை உடை பாவனை அத்தனையும் மாறிவிடும். மக்களை சந்திக்கும்போது அவரது உற்சாகம் இருமடங்காக மாறிவிடும்

ரஜினியை வைத்து எஜமான திரைபடம் இயக்கிய  இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில் “ உலகிலுள்ள அனைவரும் செய்யும் ஒரு காரியத்தை மாற்றி செய்யும் பொழுது அது ரசிகர்களால் வசீகரிக்க படுவதாக ரஜினி ஒரு முறை என்னிடம் கூறினார். இதுதான் அந்த ரகசியம் என்றார்” என்று கூறினார்.

கடவுள் பக்தி அதிகம் கொண்ட ரஜினிகாந்திற்கு வசீகரம் என்பது இயற்கையிலேயே கடவுளால் அருளப்பட்டது என்கிறார், படையப்பா, முத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த நடிகர் செந்தில். “ரஜினியை சுற்றி ரசிகர் கூட்டம் மொய்க்க முக்கிய காரணங்களில் ஒன்று ரஜினி அவரது ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதை. படப்பிடிப்பு தளத்தில் உடன் பணியாற்றும் அனைவரையும் ஒரே கோணத்தில் நடத்துவது ரஜினிகாந்தின் ஆகச்சிறந்த குணங்களில் ஒன்று” என்கிறார் செந்தில்.ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின் அவர் மீதான விமர்சனங்கள் அதிகம் எழுந்தாலும் திரையுலகை பொறுத்தவரை என்றும் சுறுசுறுப்பிற்கும், தொழில் நேசிக்கும் ரஜினிகாந்த் இன்றும் திரை உலகினரால் கொண்டாடப்படுகிறார்.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்