ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சையான வாடகை தாய் விவகாரம்.. விதிமீறல்களில் ஈடுபட்டனரா நயன்தாரா - விக்கி? - இன்று மாலை வெளியாகும் அறிக்கை..!

சர்ச்சையான வாடகை தாய் விவகாரம்.. விதிமீறல்களில் ஈடுபட்டனரா நயன்தாரா - விக்கி? - இன்று மாலை வெளியாகும் அறிக்கை..!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்த நிலையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

    இதையும் படிங்க | ‘இரவு 12 மணிக்கு போனில் அழைத்து பாடினார் கமல்’ – அன்பே சிவம் பாடல் உருவான விதத்தை பகிரும் வித்யாசாகர்

    இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

    இந்த நிலையில், நேற்று சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Director vignesh shivan, Ma subramanian, Nayanthara, Vignesh Shivan