முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காமெடி தர்பாரின் தாராள பிரபு யோகிபாபு

காமெடி தர்பாரின் தாராள பிரபு யோகிபாபு

யோகிபாபு

யோகிபாபு

கதையின் நாயகனாக எமதர்மராஜா பாத்திரத்தில் யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ படம்,  காமெடியை வள்ளலாக எள்ளலாக சொன்னது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காமெடி தர்பாரின் தாராள பிரபுவாக வலம்வரும் யோகிபாபுவின் பிறந்த நாளான இன்று அவரது திரைப்பயணங்கள் பற்றிய ஒரு தொகுப்பு.

பரட்டைத் தலை… பருமனான உடல்வாகு என சம்திங் ஸ்பெசலாக தனது ஒவ்வொரு ஒன் லைன் கவுன்டர்களிலும் டால்பி சிஸ்டம் அதிர்ந்து சிரிக்க வைக்கும்  சிரிப்பு கலைஞன் யோகி பாபு. அமீர் நடித்த ’யோகி’ திரைப்படத்திற்குப் பிறகு சாதாரண பாபுவாக இருந்து யோகி பாபுவாக மாறிய இவரை தமிழ் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது ’யாமிருக்க பயமே’.

'வாடா... வாடா... பன்னி மூஞ்சி வாயா’  என சொன்னதும் திடீரென  யோகி பாபு தோன்றும் காட்சிகளில் த்ரில்லரிலும் திகட்ட திகட்ட சிரிப்பைக் கொடுத்தது.

டைமிங் அண்ட் ரைமிங் காமெடியில் அசால்ட் ஆறுமுகமாய் யோகி பாபுவை ஜெயிக்க வைத்தது ‘காக்கா முட்டை’. நடிகர் ரமேஷ் திலக்குடன் அவரது அசிஸ்டெண்டாக யோகிபாபு செய்யும் சேட்டைகளும் கவுன்டர் வசனங்களும்…. 1 லட்சம் டீலை கெடுத்து 7 ஆயிரத்துக்கு முடித்த யோகிபாபு, ரமேஷ் திலக்கிடம் போனில் ‘ தல சரக்கு என்து,,,, சைட் டிஷ் உன்து.. ஐயம் வெய்டிங் ..’ என விஜய் ஸ்டைல்லில் சொல்லும் காட்சியும்… ‘எனக்கே விபூதி அடிக்க பாத்த இல்லை நீ’ என யோகி பாபு கேட்கும் வசனமும் தாறுமாறு காமெடியானது.

‘நீ லண்டன் சிட்டிசன் மேல கை வைக்கறடா’ என விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளையில் காமெடி பார்ட்னர் ஆன யோகி பாபு ‘மான் கராத்தே’ வில் தொடங்கி  ‘ரெமோ’ ,  ’காக்கி சட்டை’  என சிவகார்த்திகேயனுடன் காதல் காம்பிட்டேட்டராக ஜோடி போட்டார். ‘மான் கராத்தே’ வில்  கதாநாயகி ஹன்சிகாவை மணம்முடிக்க அவரின் அப்பாவுடனான சுயம்வர சந்திப்பில் வள்ளுவர் சொல்லாத திருக்குறளை சொல்லி ஹன்சிகாவை மிஸ் செய்து ரசிகர்களை மிஸ் செய்யாமல் சிரிக்க வைத்திருப்பார் யோகி பாபு.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கதாநாயகனாக நடித்து காதலிக்க கால் கடுக்க நிற்கும் பல கதாநாயகர்களுக்கு மத்தியில் அசால்டாக நயன்தாராவை காதலித்து புரபோஸ் செய்தவர் யோகி பாபு. ‘கோலமாவு கோகிலா’ வில்  ‘ அவ முன்னால நிக்கறா.. கண்ணால சொக்குறா’ என நயன்தாராவின் அழகில் மயங்கி வழிமறித்து பேசும் காதல் வசனங்களில் காமெடி மன்னன் காதல் மன்னனானார்.

Also read... எண்பதுகளின் ஈகோ பார்க்காத ரஜினிகாந்த்

கதையின் நாயகனாக எமதர்மராஜா பாத்திரத்தில் யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ படம்,  காமெடியை வள்ளலாக எள்ளலாக சொன்னது. எம லோக பதவியை தக்க வைக்க யோகிபாபு படும் பாடுகள் சிரிப்பை தந்ததோடு  சிரிப்போடு சிந்திக்கவும் வைத்தன. கதை நாயகனாக இவர் நடித்த இன்னொரு திரைப்படமான ‘மண்டேலா’,  உலக லெவலில் உயர்த்தியது காமெடியில் தாராள தர்மபிரபுவான யோகி பாபுவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Yogibabu