ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

உலகைவிட்டு பிரிந்துவிட்டாலும், இன்றும் தனது பாடல்களால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காமல் நிறைந்திருக்கும் நா.முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

ஆனந்த யாழை மீட்டிய கவிஞர் நா.முத்துக்குமார்: 4-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..
நா. முத்துக்குமார்
  • Share this:
கண்ணதாசன், வாலி, வைரமுத்து என தமிழ் செறிந்த கவிஞர்கள் கோலோச்சிய தமிழ் சினிமாவில் ஆனந்த யாழாய் வார்த்தைகளால் கோர்த்தவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த அவர், தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் 
யாப்பிலக்கணத்தை முதுகலையில் முறையாகப் பயின்று சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்திருந்தாலும், அந்தப் புலமையை தன் வரிகளில் திணிக்காமல் எல்லோராலும் ரசிக்கக்கூடிய எளிமையான வரிகளை மட்டுமே மெட்டுக்குள் சேர்த்தார் முத்துக்குமார்.

என் காதல் சொல்ல 

ஒரு பாடலாசிரியர் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அவருடைய அலைவரிசைக்கு ஏற்ப ஒரு இசையமைப்பாளர் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படி நா.முத்துக்குமாருக்கு கிடைத்த ஒரு இசையமைப்பாளர்தான் யுவன் ஷங்கர் ராஜா. நவீன கால தமிழ் சினிமாவில் காதல் பிரிவையும் காதல் தோல்வியையும் நா.முத்துக்குமார் அளவு வரிகளில் கொண்டு வந்த பாடலாசிரியர் நிச்சயம் இருக்க முடியாது.

கண்பேசும் வார்த்தைகள்”தங்கமீன்கள்” படத்துக்காக இவர் எழுதிய ”ஆனந்த யாழை” பாடல் இவருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது. "மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட தான் அழகு. மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு” என அன்பின் வழியே உலகை ரசித்த முத்துக்குமார், சைவம் படத்துக்காக அதை வரிகளாக்கி தனக்கான இரண்டாவது தேசிய விருதையும் வசப்படுத்தினார்.

சைவம் அழகே அழகேதூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், பால காண்டம் போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க் சிட்டி எனும் நாவலையும் எழுதிய நா.முத்துக்குமார், அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். 1500-க்கும் மேற்பட்ட பாடல்களின் மூலம் திரையிசையை அலங்கரித்த கவிஞர் நா.முத்துக்குமார், இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம்...
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading