Home /News /entertainment /

தமிழர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் வைரமுத்துவிற்கு இன்று பிறந்தநாள்!

தமிழர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் வைரமுத்துவிற்கு இன்று பிறந்தநாள்!

வைரமுத்து

வைரமுத்து

இளையராஜாவால் அறிமுகம் கிடைத்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பின்னரே சர்வதேச எல்லைகளை தன் தமிழ் கடந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார் வைரமுத்து.

  • News18
  • Last Updated :
    தமிழர் மனங்களில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு இன்று பிறந்தநாள்.

    தமிழ்த் திரையுலகை கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. பாடலாசிரியர், கவிஞர் என்று சொன்னாலே ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் ’வெள்ளை ஜிப்பா’ உடுத்திய இந்த கம்பீர கவிஞனின் முகம்தான் முதலில் நினைவுக்கு வரும்.

    1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்திற்காக தன் முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது. ”எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் பிரசவம் நடந்தது” என இதையும் தனக்கே உரிய தமிழில் புன்னகையுடன் நினைவு கூறுவார் வைரமுத்து.

    ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்து இவர் எழுதிய எண்ணற்ற பாடல்கள், இந்த கூட்டணி தொடர்ந்திருக்க கூடாதா என ஒவ்வொரு இசை பிரியர்களையும் இன்றளவும் ஏங்க வைக்கிறது.

    இளையராஜாவால் அறிமுகம் கிடைத்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பின்னரே சர்வதேச எல்லைகளை தன் தமிழ் கடந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார் வைரமுத்து. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ’முதல் மரியாதை’ படத்தின் அனைத்து பாடல்களுக்காக முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்ற வைரமுத்து அதன்பின் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை படங்களின் பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.

    Also read... உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது... கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள் ஒரு தொகுப்பு!

    40 ஆண்டுகளில் 6000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்துவின் திரைப்பயணத்தை 7 தேசிய விருதுகள் 6 மாநில அரசு விருதுகள் 2 பத்ம விருதுகள் போன்றவை அலங்கரித்தன. தன்னுடைய அர்ப்பணிப்பை திரைப் பாடல்களோடு நிறுத்திக் கொள்ளாமல் பல்வேறு நாவல்கள், கவிதைகள், நூல்களை எழுதி தமிழ் இலக்கியத்தோடும் தன்னை தொடர்ந்து தொடர்புப்படுத்தினார். இவருடைய இலக்கிய படைப்புகளில் தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் போன்றவை மிகப் பிரசித்தி பெற்றவை.

    சிவாஜி கணேசனில் தொடங்கி இன்றைய தலைமுறை நடிகரான விஜய் சேதுபதி வரை காதல், சோகம், பிரிவு, கொண்டாட்டம் என அத்தனை உணர்வுகளுக்கும் பாட்டெழுதி தன்னை புதுப்பித்துக் கொண்டே வரும் வைரமுத்து பாடல்கள் ஒரு தாலாட்டே!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Poet vairamuththu

    அடுத்த செய்தி