• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • டிவி சீரியல்கள் தொடங்கப்பட்ட போது எழுந்த அதே அச்சம்...! OTT ரிலீசால் தனித்துவம் இழக்குமா தியேட்டர்கள்?

டிவி சீரியல்கள் தொடங்கப்பட்ட போது எழுந்த அதே அச்சம்...! OTT ரிலீசால் தனித்துவம் இழக்குமா தியேட்டர்கள்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திரையரங்கம் உள்ளிட்ட கேளிக்கைகள் திறப்பு பற்றி இப்போதைக்கு யோசிக்கவே முடியாது என்கிற நிலையில் உள்ள தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்திய சினிமா முடங்கிக் கிடக்கிறது. கொரோனா அச்சத்தால் இனி திரையரங்குகளுக்கே செல்ல மாட்டோம் என்ற ஒரு முடிவை சிலர் எடுத்திருக்கும் சூழலில், ஒவ்வொரு மணிநேரத்துக்கும் வட்டிக் கணக்குப் பார்த்து பல கோடிகளை புரட்டும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்ன என்பது யோசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. படங்களை எடுத்து திரையரங்கங்கில் வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு OTT தளத்திற்கு திசை திரும்பியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

  இந்தியச் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய தளங்களில் சில தமிழ்ப் படங்கள் நேரடியாக வெளியாகி இருந்தாலும் அவையனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்.

  அமேசான் பிரைமில் வெளியான /வெளியாகும் படங்கள்


  முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு OTT எனும் குறுக்கு வழியை இப்போதுதான் கொரோனா காட்டியிருக்கிறது. சுமார் நாலரை கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'பொன்மகள் வந்தாள்' படம் நேரடியாக OTT ப்ளாட்ஃபாரத்திற்கு 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

  இந்த படத்தைத் தொடர்ந்து, திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், யோகி பாபுவின் காக்டெயில், சந்தானத்தின் சர்வர் சுந்தரம், அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 12 திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் உள்ளன.

  அனைத்து திரைப்படங்களையும் OTT தளங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய தயாராக இல்லாத சூழலும் சினிமாவில் உள்ளது. புதிய தொழில் நுட்பத்தால் திரையரங்குகள் அழிந்துவிடும் என அச்சம் கொள்ள தேவையில்லை என்கின்றனர் பலர். தொலைக்காட்சியில் நாடகங்கள் துவங்கியபோது இதேபோல திரையரங்கு உரிமையாளர்கள் அச்சம் கொண்டதையும், ஆனாலும் திரையரங்குகள் தனது தனித்துவத்தை இழந்துவிடவில்லை என்பதையும் பலரும் குறிப்பிடுகின்றனர்.

  OTT தளங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அல்லது நஷ்டத்தை தருமா? என்பதை கணிப்பதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும் என்பதும், பார்க்கும் ரசிகர்களை பொறுத்தே அமையும் என்பதும் நம்பிக்கை.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: