தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது - நடிகர் பிரசன்னா சாடல்

தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுவதாக நடிகர் பிரசன்னா சாடியுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது - நடிகர் பிரசன்னா சாடல்
நடிகர் பிரசன்னா
  • Share this:
கொரோனா காலத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினர் தரப்பில் ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதும் தொடர்ந்து வருகிறது.

மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசன்னா, இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் நடிகை காயத்ரி ரகுராம், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியாக அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே தமிழக அரசு இந்த ரீடிங் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை இப்பிரச்னையை தீர்க்கும் என்று நம்பிக்கையில் இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க: மீரா சோப்ராவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பிரபல நடிகரின் ரசிகர்கள் - ஆதரவுக் கரம் நீட்டிய சின்மயி
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading